லோக்சபா–பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகை..
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச்சபாநாயகர்ஓம்பிர்லாஇன்றுதெரிவித்தார்.பிரதமரின்பாதுகாப்புகருதியேஅவரதுபதிலுரைரத்துசெய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார். பிரதமர்மோடியைதாக்கஎதிர்க்கட்சிகள்சதிசெய்துள்ளதாகசபாநாயகர்ஓம்பிர்லாகூறியது பெரும்பரபரப்பைஏற்படுத்தியது.இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், “காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. நாடாளுமன்றத்தின்கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.