திருவாரூர் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அறிவியல்இயக்க மாநாட்டில் தீர்மானம்..

ஜன 25 நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட 17 வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டினை மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமையேற்று நடத்தினார், மாவட்டத் துணைத் தலைவர்கள் நீலன் அசோகன்,ரமேஷ், சரவணராஜன், சாந்தகுமாரி, சந்திரா, ராணி உள்ளிட்டோர் முன்னிலை உரையாற்றினர். மாநிலச் செயலாளர் மாணிக்கத்தாய் மாநாட்டின் துவக்கோரையாற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் சேதுராமன் “அறிவியல் இயக்கமும் காவிரி படுகையும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ்துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் அவர்கள் “அறிவியலை அறிவோம் அறிவியலால் இணைவோம்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இணைச்செயலாளர்கள் பொன்முடி, ஜெகதீஷ்பாபு, மகேந்திரன், பிளாட்டோ, முகைதீன் இபுனு அரபி,விஜய் ,அகிலன் , நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் இராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் தேவிலட்சுமி, ஒன்றிய பொருளாளர் இளவழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட மாநாட்டில்தீர்மானங்களாக
1.மாநகராட்சிகளில் இருப்பது போல திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் “அறிவியல் விழிப்புணர்வு வை ஏற்படுத்தும் நோக்கில் “ஸ்டெம் பார்க்” (அறிவியல் தொழில்நுட்ப பூங்கா) அமைக்க வேண்டுமெனவும், மேலும்மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மை வளர்க்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் வானவில் மன்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிபடுத்தி அரசானை பிறப்பிக்க அரசிடம் இம்மாநாடு வலியுறுத்துகிறது. 2, சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு T.R.B. ராஜா அவர்களால் பார்வையிட பட்டதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூன்றுஆறுகள் பிரியும் தலைப்பினை சுற்றுலாத்தளமாகஅறிவித்து சிறுவர்களுக்கான பூங்காவும் , படகு துறையும்,அருங்காட்சியமும் அமைக்கப்பட வேண்டும் என இம்ம மாநாடு கேட்டுக்கொள்கிறது. 3, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலுள்ள அலையாத்தி காடுகளை மாணவர்கள் பார்வையிடும் வகையில் வனத்துறை வழிகாட்டுபவருடன் (Guide) படகு போக்குவரத்தை அதிகப்படுத்தி வனத்துறை அனுமதியினை விரைவாகவும், எளிமையாகவும் கிடைத்த ஏற்பாடு செய்திட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 4, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் 1931 ல் மாட்டுவண்டியில் நூல்களை அடுக்கி சுற்றியுள்ள 75 கிராமங்களில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய மேட்டூர் அனை கட்டுமான பொறியாளர் சு.வி. கனகசபை பிள்ளை அவர்கள் பயன்படுத்திய மாட்டுவண்டியும், அவருடைய திருவுருவ சிலையும் மன்னார்குடியில் அமைய உள்ள டிஜிட்டல் நூலகத்தில் இடம்பெற வேண்டுமென இம்மாநாடு தமிழ்நாடு அரசினை கேட்டுக் கொள்கிறது உள்ளிட்டபத்துதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் துவக்கத்தில் மாவட்ட செயலாளர் காந்தி ராஜன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், மாநாட்டின் நிறைவில் மாவட்ட பொருளாளர் அன்பழகன் அவர்கள் நன்றியுரை கூறினார். மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய பொறுப்பாளர்களாக மதிப்புறு தலைவர் நீலன அசோகன்,மாவட்ட தலைவர் தெய்வ பாஸ்கரன், மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம்,மாவட்ட பொருளாளர் சந்திரா உள்ளிட்ட 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் 49 செயற்குழு உறுப்பினர்கள் 66 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.