நீடாமங்கலத்தில்திரு.ரா.ராஜசேகரன் அவர்களின்படத்திறப்பு நிகழ்வில் புகழஞ்சலி…..


நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் கழக செயலாளரும், நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.ரா.ராம்ராஜ் அவர்களின் தந்தையுமான, கழகத்தின் மூத்தவர் திரு.ரா.ராஜசேகரன் அவர்களின் மறைவையடுத்து, நீடாமங்கலத்தில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்வில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா அவர்கள் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.பூண்டி.கே.கலைவாணன் MLA, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.S.S.பழனிமாணிக்கம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.டி.முருகையன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. நீலன்.அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.ராஜமாணிக்கம், மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு. க.தன்ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.தலையாமங்கலம்.G.பாலு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.சோம.செந்தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சு.ஞானசேகரன், ஒன்றிய-நகர-பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் உடன் பங்கேற்றனர்.
