அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 25 தொகுதி,மற்ற கட்சிகள் விவரம்….
வேட்பாளர் நேர்கானலை முடித்த அதிமுக, அடுத்தக்கட்டமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறது. தற்போது வரை பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அமமுகவும் இணையவுள்ளது. அதே நேரம் தேமுதிக மதில் மேல் பூனையாக இரண்டு பக்கமும் பேசி வருகிறது. திமுகவும் அதிமுகவும் ராஜ்யசபா சீட் தருவதை உறுதி செய்துள்ள நிலையில், சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் தான் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் 2 நாட்களில் அதிமுக- பாஜக இடையே தொகுதி பங்கீட்டை முடித்து பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வரவுள்ளார். அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் முகாமிடும் பாஜக மூத்த நிர்வாகிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். அந்த வகையில் அதிமுக தலைமையிலான அணியில் அன்புமணி தலைமையிலானபாமக,ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் ஆகியகட்சிகள்உள்ளது.அதே நேரம் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருந்தாலும் பாஜக தலைமையில் ஒரு அணியானது உள்ளது. பாஜக தலைமையிலான அணியில் டிடிவி தினகரனின் அமமுக, புதிய நீதி கட்சி, ஐஜேகே, ஆகிய கட்சிகள் உள்ளது. எனவே அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்துஉள்ஒதுக்கீடுவழங்கப்படவுள்ளது.எனவேஇன்றுதமிழகம்வரும்பியூஸ்கோயலிடம்அதிமுகபொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமிசந்தித்துதொகுதிபங்கீடுதொடர்பாகபேச்சுவார்த்தைநடத்தவுள்ளார்.இந்தபேச்சுவார்த்தையில் குறைந்தது 40 முதல் 45 தொகுதிகளை பாஜக தரப்பில் இருந்து கேட்கப்படும் என தெரிகிறது. பாஜகவிற்கு 20 முதல் 25 தொகுதிகளும், அமமுகவிற்கு8முதல்10தொகுதிகளும்,ஐஜேகே,புதியநீதிக்கட்சிக்குதலா2தொகுதிகளும்ஒதுக்கப்படும்எனதகவல்வெளியாகியுள்ளது.மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 18 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 5 தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே இன்று இரவு சென்னை வரும் பியூஸ் கோயலிடம் அதிமுக தரப்பு நாளை இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வருகிற 22ஆம் தேதி சதூர்த்தி தினத்தில் தொகுதிபங்கீடுமுடிவாகிஒப்பந்தம்கையெழுத்தாகும்எனகூறப்படுகிறது.இதனையடுத்துகூட்டணிகட்சிதலைவர்கள்அனைவரையும்பிரதமர்மோடிகலந்துகொள்ளவுள்ள வரும் 23ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மேடையேறவுள்ளனர்.