மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் அருகில் தீபத்தை ஏற்றும் விவகாரம்….?
.மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரண்டுமே திருப்பரங்குன்றம் மலையில் அமைந்தள்ளது. இங்கு சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ளதூணில்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடக் கோரிமனுதாக்கல்செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் , சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ‘தீபத்தூண்’ அமைந்திருக்கும் இடம், தர்காவுக்குச் சொந்தமான பகுதி அல்ல என்று தீர்ப்பளித்தார். அத்துடன் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு முதல் வழக்கமான இடத்துடன் மட்டுமல்லாமல், தீபத்தூண் அருகிலும் தீபத்தை ஏற்றி, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஆனால் இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரிகளும், தமிழக அரசு உத்தரவை நிறைவேற்றத் தயங்கியது.. தயங்கிதை என்பதை விட இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டது. இதனிடையே தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பில் மனுதாரரே தீபம் ஏற்றலாம் என்று , நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்பட திமுக ஆதரவு கட்சிகள் அத்தனையும் ஒரே சேர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த தீர்ப்பை எந்த காரணம்
கொண்டும் அமல்படுத்த முடியாது என்பதில் உறுதியாக உள்ளன. அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசுசார்பில்மேல்முறையீடும்செய்யப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் எனில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை திமுக கூட்டணிகட்சிகள்நேரடியாககடுமையாக
விமர்சிக்கதொடங்கிஉள்ளன.அவரைஒருதரப்புக்குஆதரவாகசெயல்படுவதாககுற்றம்சாட்டியுள்ளன.அத்துடன்அவருக்குஎதிராகநாடாளுமன்றம் வரை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்க தொடங்கி உள்ளன. இந்தவிவகாரம் நாடாளுமன்றத்தில் அண்மையில் புயலை கிளப்பியது. ஒட்டுமொத்தமாக தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்பிரச்சனையைகிளப்பினார்கள்.இந்தவிவகாரத்தில்மத்தியஅரசுசார்பில்அமைச்சகர்களும்கடுமையானபதிலடிதந்தார்கள்.இந்த சூழலில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது இந்திய கூட்டணிக்கட்சிகளின்நாடாளுமன்றஉறுப்பினர்கள் அவர் மீது குற்றவிசாரணை தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்படப் பல தமிழக எம்பிக்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர தீவிரமாக வேலை செய்து வருகிறார்களாம். இந்த தீர்மானம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவுகள், ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சட்டத்தைக் கொண்டு கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள். ஆனால் இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதியைக் குற்றவிசாரணை மூலம் நீக்குவது என்பது இந்தியாவில் மிகவும் கடினமான நடைமுறையாக இருக்கிறது. கிட்டத்தட்ட அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றும் அளவிற்கு எம்பிக்கள் ஆதரவு தேவை.. 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு தேவையாகும். அதாவது ஆளும் கட்சி
மற்றும்எதிர்க்கட்சிஎம்பிக்கள்இணைந்துதான்ஒருஎம்பியைநீக்கவேமுடியும்.ஆனால்மக்களவையில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வரக் குறைந்தது 100 உறுப்பினர்களின்கையெழுத்துஅல்லதுமாநிலங்களவையில் (Rajya 50 உறுப்பினர்களின் கையெழுத்துத் தேவையாகும். இது எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. இதற்கு காங்கிரஸ் ஆதரவுஅளிக்கவேண்டும்.ஆனால்காங்கிரஸ் இதற்கு நேரடியாக ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறித்தான்.அதேநேரம்100எம்பிக்கள்கையெழுத்துபோட்டுகொடுத்தாலும்நாடாளுமன்றத்தில்ஏற்கப்படுமாஅல்லதுவிசாரணைக்கு உட்படுத்தப்படுமா என்பது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து தான் இருக்கும். பொதுவாக ஒரு நீதிபதியை நீக்குவதற்கு, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மை என்ற காரணங்கள் மட்டுமே அரசியலமைப்பில்அனுமதிக்கப்படுகிறது.ஒருநீதிபதிஅளித்ததீர்ப்பானதுஅவருக்குஎதிராகக் குற்றவிசாரணைகொண்டுவரப்போதுமானதாஎன்பதுசபாநாயகரின்முடிவைபொறுத்து இருக்கும்.ஒருவேளைசபாநாயகர்ஏற்றுக்கொண்டால் விவாதிக்கப்படும். விவாதம்முடிவில் ஓட்டெடுப்பு நடைபெறும். ஆனால் இதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.