Others
வைகோவிற்க்கு 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து—-மல்லை சத்யா..
மதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் அவரின் சகோதரராக பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து வந்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் அந்தஸ்தில் இருந்தவர். இதனிடையே மல்லை சத்யாவுக்கும், வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளரான எம்.பி துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சனை பூதாகரமான நிலையில் மதிமுகவிலிருந்து மல்லை சத்யா அதிரடியாக நீக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சியை ஒன்றை மல்லை சத்யா தொடங்கி உள்ளார்இத்நிலையில் வைகோ குறித்து பரபரப்பான கருத்துக்களை அவ்வப்போது மல்லை சத்யா தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களிடையே மல்லை சத்யா பேசுகையில், ‘எனது அரசியல் முகவரி வைகோ தான். எப்போது அவரது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தாரோ அதிலிருந்து வைகோ என்னை அலட்சியப்படுத்தினார். ஜனநாயக மாண்பு இல்லாத கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ செயல்படுகிறார். பாஜகவை சார்ந்தே துரை வைகோவின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. அனைத்தையும் இப்போது சொல்ல முடியாது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ என்ற விமர்சனம் சரியானது.வைகோ, மதுவுக்கு எதிரான நடை பயணம் நடத்துகிறார். துரை வைகோ சிகரெட் கம்பெனி நடத்தி வருமானம் ஈட்டி வந்தார். இப்போது அதனை அவரது குடும்பத்தினர் நடத்துகின்றனர். வைகோவின்குடும்பத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது. 5 கோடி மதிப்பில் நட்சத்திர விடுதியும், 15 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தில் 5 கோடி மதிப்பில் அரண்மனை போல வீடு ஒன்றையும் கட்டியுள்ளார் என்று மல்லை சத்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.மல்லை சத்யாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘மல்லை சத்யா என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான, அபாண்டமான பொய்கள். என் நேர்மை உலகறிந்தது. ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு போல மல்லை சத்யா பேசி வருகிறார். எனது எதிரிகள் கூட இந்த குற்றச்சாட்டை சொன்னதில்லை, சொல்லவும் மாட்டார்கள். நேர்மை என்ற கவசமும், நாணயமும் தான் அரசியல் பயணத்தில் என்னை பாதுகாத்து வருகிறது. என் அரசியல் பயணத்தை பற்றி எல்லா தலைவர்களும் அறிவார்கள்’ இவ்வாறு வைகோ கூறினார்..