fbpx
Others

மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில் இந்தியாவுக்கு 2 வது இடம் !

மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில்இந்தியாவுக்கு 2 வது இடம் !
அனைத்துலக சிலம்ப போர்கலை சார்பில் நிறுவனத்தலைவர்மகாகுரு. முரளீதரன் ஏற்பாட்டில்நடந்த 8வது சர்வதேச சிலம்ப போட்டியில் ஒட்டுமொத்த வெற்றி அணியாக 68 தங்கம் வென்று மலேசிய அணி முதலிடத்தை பெற்றது.11 தங்கங்களை வென்ற இந்திய இரண்டாவது இடத்தையும்,10 தங்கங்களுடன் மலேசிய அடிதட சிலம்ப அணி மூன்றாவது இடத்தையும்,ஒரு தங்கத்தை வென்று சிங்கப்பூர் நான்காவது இடத்தையும் பெற்றது.மலேசியா சிலம்பம் போர்க்கலை மன்றம் ஆதரவுடன், அனைத்துலக சிலம்பம் போர்க்கலை சம்மேளனம் மலேசியா சிரம்பான், டெர்மினல் விற்பனை மைய வளாகத்தில் நடத்திய இப்போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கெடுத்தனமலேசியா, இந்தியா, இந்தோனேசிய, சிங்கப்பூர், அபுதாபி, மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.பங்கெடுத்தனஎன போட்டி ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர். மாஸ்டர். இந்திரஜித்முரளிதரன்கூறினார்.சிலம்பத்திற்குஉலகளவில்போட்டிநடைப்பெறுவதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், மலேசியத் தமிழர்கள் மலேசியாவில் சிலம்பத்தை காப்பாற்றி வருவதை காண பெருமையாக உள்ளது, அதே வேளை மெய்சிலிர்த்து போனதாக இந்திய யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி தலைவர். சிலம்ப ஆசான். திருவொற்றியூர். சண்முகம் கூறினார்.போட்டியை நெகிரி செம்பிலான் மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்து அரசு ஆட்சிக்குழு உறுப்பினர். அருள்குமார் ஜம்புநாதன் தொடக்கிவைக்க, சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர். தளபதி.ஜேவி கலந்துக்கொண்டு நல்லாதரவு வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close