

சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 47), இவருக்கு ராமச்சந்திரன் (வயது 52) என்பவருடன் திருமணம் ஆகி வசந்தகுமார் (வயது 30), ராஜ பிரபா (வயது 25) மற்றும் முகில் (வயது 19) என மூன்று மகன்கள்கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரனை பிரிந்த பிரபா, தனது மூன்று மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை கொண்டு அவர் பிழைப்பு நடத்திவந்தார்.இந்த நிலையில் நேற்று காலை வடபழனி காவல் நிலையத்திற்கு சென்ற பிரபா தனது மூன்றாவது மகன் முகில் மது போதையில் வீட்டுக்கு வந்து தொடர்ந்து தகராறு செய்து வந்த நிலையில் என்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்ததால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டேன் எனக்கூறி சரணடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
.முன்னுக்கு பின் முரணான தகவல்கள்..கொலைச் சம்பவம் குறித்து பிரமிளாவிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும்கொல்லப்பட்டமுகிலின்உடலில்6காயங்கள்மிகஆழமாகஇருந்ததால்,பிரமிளாவால்அவ்வாறுவெட்டியிருக்க முடியுமா என்ற சந்தேகமும் வலுத்தது.இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பிரமிளாவின் மூத்தமகன்வசந்தகுமார்மற்றும்அவரதுநண்பர்கண்ணன்ஆகியோர்வீட்டில்இருந்துவெளியேசென்றதுகண்டறியப்பட்டது.இதனையடுத்து பிரமிளாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனது மூத்த மகன் வசந்தகுமார் தான் இளைய மகன் முகிலை வெட்டி கொலை செய்தார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். தலைமறைவாக இருக்கும் வசந்தகுமார் மற்றும் அவரது நண்பன் கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின்விசாரணையில்வெளிவந்ததகவல்கள்பின்வருமாறு..மதுப்பழக்கத்திற்குஆளானமுகில்தினமும்குடித்துவிட்டுவந்துதனதுதாயிடம்செலவுக்குபணம்கேட்டுஅவரைஅடித்துதாக்கிதகராறுசெய்துவந்தார்.முகிலின்செயல்பாடுகளால்மூத்தமகன்வசந்தகுமாருக்கு பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் தனியே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். சமீபத்தில் வசந்தகுமாருக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அவருக்கு திருமணம் நடைபெற தேதி குறிக்கப்பட்டுள்ளதுஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல முகில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மது போதையில் தனது தாயை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றார்.மகனிடம் கூறி வருத்தப்பட்ட பிரமிளா..பிரமிளா இது குறித்து தனது மூத்த மகன் வசந்தகுமாரிடம் கூறி வருத்தப்பட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த வசந்தகுமார் தனது நண்பர் கண்ணனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அங்கு தூங்கிக் கொண்டிருந்த முகிலை அறிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முகில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்.தனது மகன் வசந்தகுமாருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதால் கொலை வழக்கில் சிக்கி அவர் சிறைக்கு சென்று விடக்கூடாது, அப்படி நடந்தால் அவரது திருமணம் நின்றுவிடும் என்ற எண்ணத்தில், தானேதனதுமகனைகொலைசெய்ததாகபிரமிளாகாவல்நிலையத்தில்சரண்அடைந்திருக்கிறார்.இதனையடுத்து பிரமிளா, வசந்தகுமார் மற்றும் கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..