fbpx
Others

தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை – சிறப்புசெய்தி

தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை சார்பில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி சென்னை அருகே உள்ள. மேல கோட்டையூர். தமிழ்நாடு. உடற்கல்வியியல் மற்றும். விளையாட்டு பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர். கஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நந்தகுமார் வரவேற்றார். சிலம்பபோட்டியை உலக சிலம்ப ஆசான்கள். மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர்.என். ஆர். தனபாலன். தொடங்கி வைத்து பேசியதாவது; தமிழ்நாட்டின் பாரம்பரியதற்காப்புகலையானசிலம்பம்இன்றுதமிழகம்முழுதும்வேகமாகபரவிவருகிறதுபல்வேறு அமைப்புகள் வாரந்தோறும் போட்டி நடத்தி மாணவர்களுக்கு ஊக்கத்தை. அளித்து வருகிறார்கள். சிலம்பக்கலலை சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்லாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி. மாரடைப்பு போன்ற அபாயகரமான நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலில் சக்கரை, உப்பு போன்றவைகளை கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட நோய் தீர்க்கும். அரிய மருத்துவ கலையாக சிலம்பம் விளங்குகிறதுஇந்த கலைக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் கொடுத்து மாணவர்களுக்கு பயன் தரும் விதத்தில். அரசே போட்டியை நடத்தி சான்றிதழை வழங்க உயர் கல்வி படிப்பதற்கும். அரசு வேலைவாய்ப்பில் சேர்வதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.புல்லுருவிகள்போல்.பல்வேறுஅமைப்புகள்.மாணவர்களையும்,பெற்றோர்களையும்ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.இதனை அரசு கவனத்தில் கொண்டு. கட்டுப்படுத்த வேண்டும்.இல்லையென்றால். சிலம்பத்தால் எந்த பலனும் இல்லை. என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உருவானால். சிலம்ப கலையை. பழகுவதற்கு. மாணவர்கள் விரும்ப மாட்டார்கள்.இதனை உணர்ந்து. தமிழ்நாடு அரசு. இந்த கலைக்கு உரிய அங்கீகாரம் வழங்கி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு மற்றும் தேசிய பள்ளி விளையாட்டு போட்டியில் முறையாக சிலம்பத்தை இடம் பெற வைத்து அதன்மூலம் மாணவர்களுக்கு உரிய பயனை பெற்று தரவேண்டும் என்று பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.பல்வேறு சிலம்பக்குழு ஆசான்கள்,300,க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பேரவை பொருளாளர். சரவணன் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close