fbpx
Others

ரயில்வே கிராசிங்கில் கேட் கீப்பரின் சிக்னல் இல்லாமல் எப்படி ரயில் இயக்கப்பட்டது……

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் பதிவில் விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ள விஜய், கேட்கீப்பரின் தவறுகள் குறித்து பேசாதது விவாதமாகி இருக்கிறது.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் வேன் மீதுரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பராக பணியாற்றிய பங்கஜ் சர்மா என்பவரின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரயில் வந்த போது, பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடவே இல்லை என்று தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சங்கர், காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.அதேபோல் ரயில் விபத்து நடந்த போதும் கூட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா வெளியில் வந்து பார்க்கவில்லை. அப்போது பொதுமக்கள் சென்று பார்த்த போது, அவர் தூங்கி கொண்டிருந்துள்ளார். ரயில்வே கிராசிங்கில் கேட் கீப்பரின் சிக்னல் இல்லாமல் எப்படி ரயில் இயக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் ஏன் முக்கியமான லெவல் கிராசிங் சிக்னலுடன் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு இன்னொரு பக்கம் தெற்கு ரயில்வே சார்பாக, முக்கியமான லெவெல் கிராசிங் என்பதால் சுரங்க பாதை அமைக்கமுயற்சித்தோம். ஆனால் ஒரு வருடமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே தரப்பில் விபத்திற்குகேட்கீப்பர்பங்கஜ்சர்மாவின்அலட்சியமேகாரணம்என்றுஒப்புக்கொண்டுள்ளது  .இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய விவாதம் எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close