fbpx
Others

ஈரோடு-சுகாதார நிலையத்துக்குள் புகுந்த திருடர்கள்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் துணை சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பணம் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து உள்ளே இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் இரவு புங்கம்பள்ளி கரிய காளியம்மன் கோவிலில் இருந்து பித்தளை பொங்கல் பானை யையும், சுங்கக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வடி வேல், தெய்வசிகாமணி ஆகிய 2 பேர் வீடுகளில் இருந்த 2 ஆடுகளையும் யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே ஆட்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்தபுகாரின்பேரில்புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமந பர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

Related Articles

Back to top button
Close
Close