fbpx
Others

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின்மூன்றாம் ஆண்டு விழா-சிறப்பு செய்தி.

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி திடக்கழிவு மேலாண்மை நீர் மேலாண்மை காற்று மாசுபாட்டை குறைத்தல் நெகிழி பயன்பாட்டை குறைத்தல் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மறுசுழற்சி பயன்பாடு போன்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தினார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள், டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மாணவிகள், ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் 34 பேர் நீடாமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு செய்து சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு கட்டுரைகளை தாக்கல் செய்தனர். இவர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகளை பூண்டி புஷ்பம் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் S.விஜயகுமார் வேதியல் துறை பேராசிரியர் எஸ் கே தியாகராஜன் தஞ்சை கரந்தை தமிழவேல் உமா மகேசுவரனார் கலைக் கல்லூரி துணை பேராசிரியர் முனைவர் S.சொர்ண ரேகா ஆகியோர் மதிப்பீடு செய்து 30 .03.25 அன்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள் . நிகழ்ச்சிக்கு தலைவர் பத்மஸ்ரீ ராமன் தலைமை வகித்தார் பொருளாளர் ரவிச்சந்திரன் கௌரவ தலைவர் சந்தானராமன் முன்னிலை வகித்தனர் . ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார் துணை தலைவர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார் செயலாளர் ஜெகதீஷ் பாபு அறிமுக அறிமுக உரையாற்றினார் துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார் .

Related Articles

Back to top button
Close
Close