“கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி” அதிமுக ஐடி விங் சரமாரி தாக்கு!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுக விவகாரம் தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில்,அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று சைதை துரைசாமிவலியுறுத்தினார். .அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் நிலையில், சைதை துரைசாமி இவ்வாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,இன்றுஅதிமுகஐடிவிங்சார்பில்சைதைதுரைசாமிக்குபதில்கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்கள் தான். “நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்” என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா?கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன். கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் “நானும் அரசியலில் இருக்கிறேன்” என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள்அறிந்திருக்கவாய்ப்பில்லை.இந்தஇயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். “