fbpx
Others

போதைப் பொருள் கடத்தல்– 5 பேர் கைது…?

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அனைத்து காவல் நிலைய போலீஸாரும் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.அதன்படி,அண்ணாசாலை போலீஸார் ஒயிட்ஸ் ரோடு, சுமித் ரோடு சந்திப்பில் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.பிடிபட்டவர்கள்வேளச்சேரிவிக்னேஸ்வரன்(24),தரமணிபாலச்சந்திரன்(28),கொளத்தூர்யுவராஜ்(25),பெரம்பூர்சுகைல்(24),அம்பத்தூர்பிரவீன்(31)என்பதுவிசாரணையில்தெரிந்தது.அவர்கள்வைத்திருந்தபையைசோதனைசெய்தபோதுஅதில்23கிராம்மெத்தம்பெட்டமைன், 5.30 கிராம் உயர்ரக கஞ்சா, 2.60 கிராம் வலி நிவாரண மாத்திரைகள், ரொக்கம் ரூ.1.67 லட்சம், 2 எடை மெஷின்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும் 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.பிடிபட்டவர்களில் 4 பேர் அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராகவும், ஒருவர் வழக்கறிஞராகவும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 5 பேரையும் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close