fbpx
Others

கடம்பூரில் யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி, தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மக்காச்சோளக்காட்டிற்கு இரவு காவலுக்கு சென்றுள்ளார். மக்காச்சோள காட்டிற்குள் மறைந்து நின்றிருந்த காட்டு யானை ராஜப்பனை தாக்குவதை கண்டு அருகில் உள்ள காட்டில் காவல் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், ஜடைசாமி, மாரன் ஆகியோர் சத்தம் போட்டு யானையை விரட்டி விட்டு சென்று பார்த்த போது ராஜப்பா காயாத்துடன் கிடந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த ராஜப்பாவை பசுவனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்தும், பின்னர் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த போது ராஜப்பனை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேதத்தை பரிசோதனைக்காக சவக்கிடங்கிங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி அளித்து புகாரின் பேரில் கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ் குமார்

Related Articles

Back to top button
Close
Close