Others
அத்திப்பட்டு-தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டுசமத்துவ பொங்கல் விழா இன்று கலைஞர் அரங்கில் நடைபெற்றது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் ஏற்பாட்டில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக பொங்கல் விழாவை ஒட்டி ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிநடந்தது. லாரி மூலம் கரும்புகட்டு கொண்டு வந்துஅனைவருக்கும் வழங்கப்பட்டது.