fbpx
Others

சத்தியமங்கலம் அரசூர்அருகே வேன் கவிழ்ந்து விபத்து.

சத்தியமங்கலம் அருகே வாழைக்காய் தார் லோடு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளிக்கு மினி லாரி ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு சென்றது. மினிலாரியை டிரைவர் ஷேக்முகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மினி லாரிசத்தியமங்கலம் – கோபி ரோட்டில் சென்ற போது அரசூர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரி விழுந்த வேகத்தில் வாழைக்காய் ரோட்டில் விழுந்து சிதறியது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.DIST.Reporter.Suresh.

Related Articles

Back to top button
Close
Close