RETamil News

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா : பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 90 பேர்!

சென்னை:

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள்  எண்ணிக்கை 21,700-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 752 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 90 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இன்று கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை  23,303 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 106 பேர் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 65,977 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close