விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்ஆத்மி கட்சியின் சார்பாக,கோரிக்கை மனு.
தமிழ்நாடு, தேனி மாவட்டம் – சின்னமனூரில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, நலத்திட்ட உதவிகள் விரைவில் கிடைத்திட !!! தேனி மாவட்டம் – சின்னமனூரில் 18/10/2024 இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா அவர்கள் தலைமையில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை தங்குதடையின்றி விரைந்து கிடைத்திட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.மேலும்,உத்தமபாளையம்ஒன்றியம்நாகையகவுண்டன்பட்டி கிராம ஊராட்சி புலத்தில் உள்ள சண்முகா நதி நீர்த்தேக்க அணைக்கட்டு பெயர் பலகையில் நாகையகவுண்டன்பட்டி என்ற பெயர் இடம்பெறவேண்டும் என்றும், நாகையகவுண்டன்பட்டி புலத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் வகைகள் ஆயக்கட்டில் சேர்க்கவேண்டும், மேலும் சண்முகா நதி நீர் தேக்க அணைக்கட்டை சுற்றுலா மையமாக அரசு அறிவித்ததை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசிய நிகழ்வு……………………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.
