அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சட்டசிக்கல்…?

செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஏதும் சிக்கல் ஏற்படுமா?

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “செந்தில் பாலாஜி ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள்” என மனுதாரருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.15 மாதங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, அவர் அமைச்சராகி உள்ள நிலையில், இப்போது அமைச்சர் பதவியை ஏற்றதாலேயே அவரது ஜாமீனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரவையில் இல்லை. அதனால் அதிகாரத்தைப் பயன்படுத்திசாட்சியங்களைக் கலைக்க மாட்டார் எனவும், நீண்ட நாள் சிறையில் இருந்ததாலுமே அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் தி.மு.க தலைமை அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. நிபந்தனைகளை நீக்கச் சொல்லி நீதிமன்றத்துக்குச் சென்றபோது அமைச்சராகியிருப்பது குறித்து கேள்வி நிச்சயம் எழும்.எனவே, மீண்டும் அமைச்சரவையிலிருந்துநீக்கும்அளவுக்கோநிபந்தனைகளை இன்னும் கடுமையாக்கும் இடத்துக்கோ இந்த வழக்கு செல்லலாம் என்கிறார்கள். தி.மு.க-வில் இருக்கும் சட்ட வல்லுநர்கள் இது குறித்து தலைமைக்குச் சொன்னார்களா சொல்லவில்லையா அல்லது அவர்கள் சொல்லியும் தலைமை கேட்கவில்லையா எனத் தெரியவில்லை.ஒருபக்கம், சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டால் வழக்கு விசாரணை வேகம் பெறும், மறுபக்கம், ஜாமீனை மறு பரிசீலனை செய்ய மனுத்தாக்கல் செய்யப்பட்டால் மீண்டும் அமைச்சரானது குறித்த கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். மீண்டும் அமைச்சராக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றாலும், அவர் அமைச்சராக இல்லாததும் ஜாமீன் கிடைக்க ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து வரும் நாள்கள் சிக்கலாகவே தொடரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்..