பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல்….?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழுகி வீணாகிப் போனது இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பயிர் காப்பீடு தொகை வழங்கிய நிலையில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முழுமையாக கிடைக்காத நிலையில் மெதூர் கிராமத்தில் விவசாயநெற்பயிர்களுக்கு உரிய பயிர் காப்பீடு தொகை வழங்காததைகண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்அரசு பேருந்தை சிறைபிடித்து பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அங்கு வந்த வேளாண்துறை அதிகாரிகள் காவல்துறையினர் வரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மறியல் போராட்டத்தில் விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள்தேவம்பட்டு. ராமு, ரமேஷ், எழிலரசன்,கிளிக்கோடி, கர்ணா விஜயகுமார் ,சுதாகர் , கணபதி, சீனிவாசன் ரவிச்சந்திரன்பிரகாஷ்,உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.