வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா 21 கிலோ தங்க ஆபரணங்கள்காணிக்கை..
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இந்த ஆபரண தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த தொகுப்பில், கிரீடம், ஒட்டியாணம், புஜகீர்த்திகள், சங்கு சக்கரம், அபய ஹஸ்தங்கள் உள்ளிட்ட 46 வகையான ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளன. தேவஸ்தான வரலாற்றிலேயே ஒரு தனிநபரால், கோவிலுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது.சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்த வர்தமான் ஜெயின்,அமெரிக்காவின்டெக்சாஸ்பல்கலைக்கழகத்தில்கம்ப்யூட்டர்சயின்ஸில்முதுகலைப்பட்டம்பெற்றவர்.1997ல்தொழில்முனைவோராகப் பயணத்தைத் தொடங்கிய இவர், டெல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து, பின்னர் ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ என்ற சர்வதேச சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனத்தையும், ஆசியா சென்னை இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தையும் நிறுவினார்.* கடந்த 2025ல், ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ன் பங்குகளை, ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தார்.தொழிலதிபராக மட்டுமல்லாமல், ‘ஸ்ரீ சரிதா ஜெயின் அறக்கட்டளை’ மூலம் கல்வி, பசிப்பிணி போக்குதல் செய்துவரும் வர்தமான், சென்னை காஞ்சிகாமகோடிகுழந்தைகள்மருத்துவமனை மூலம் மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.

