Others

உச்ச நீதிமன்றம் உத்தரவு…..

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் - iPleadersகேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா உள்ளிட்டோருக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ‘சட்டப்பூர்வ வரம்புகளை கடந்து, மற்ற விசாரணை முகமைகளின் அதிகாரத்திற்குள் அமலாக்கத்துறைதலையிடக்கூடாது’என,எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த 2016 – 26 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவிவகித்தபோது, அவரது மகள் வீணாவின், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு எந்த சேவையும் பெறாமல், 2.78 கோடி ரூபாயை சி.எம்.ஆர்.எல்., எனப்படும், கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல் லிமிடெட்’ நிறுவனம் வழங்கியது.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது கணவர் முகமது ரியாஸ் ஆகியோர் எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல்Latest Tamil News அறிக்கையை பதிவு செய்ய பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றமும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டநிலையில், இதைஎதிர்த்துபினராயிவிஜயன்தரப்பில்உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீட்டுமனுதாக்கல்செய்யப்பட்டது.இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தி மற்ற விசாரணை அமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் அமலாக்கத்துறை தலையிட கூடாது. முன்னாள் முதல்வர்களை விசாரிக்க அமலாக்கத்துறை-க்கு முழு அதிகாரமும் உண்டு. அதே சமயம், அமலாக்கத் துறை பரிந்துரையின் பேரில், ஒரே நாளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிட்டது தவறு.இவ்வழக்கில், மேல்முறையீடு செய்வதற்கு பினராயி விஜயன் தரப்புக்கு உரிமை இருக்கிறது. இவ்வழக்கை கேரள உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுவிசாரிக்கஅனுமதிஅளிக்கிறோம்.அவர்கள்உயர்நீதிமன்றத்தில்மீண்டும்மேல்முறையீடுசெய்யும்வரை,லஞ்சஒழிப்புத்துறைஒருவாரத்திற்குவிசாரணைநடத்தக்கூடாது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close