fbpx
Others

செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பது என்ன..?

செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாற்றப்படுவாரா?

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள கே. பி. சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி மிகவும் குறைந்திருக்கிறது.இந்த வருடம் மாணவிகள் சேர்க்கையும் மிகவும் குறைந்துள்ளது.1900 மாணவிகள் படித்த இந்த பள்ளியில் தற்போது 1200 பேர் இருப்பதாக தெரிகிறது.பள்ளியில் பாடங்கள் சரிவர கற்றுத் தருவதில்லை தலைமை ஆசிரியை மாணவிகளை சரியாக வழி நடத்தவில்லை என்று தெரிகிறது.கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்குகின்ற நிகழ்ச்சியில் 1200 க்கு மேல் உள்ள மாணவிகளின்சுமார்200மாணவிகள் மட்டுமேவந்திருந்தார்கள்.அவர்களும்கொளுத்தும்வெயிலில்உட்காரவைக்கப்பட்டிருந்தனர்.  எவ்வளவு சொல்லியும் மாணவிகள் வரவில்லை என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டாலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய தவறாகும்.ஆசிரியர்களையும் மாணவிகளையும் வழி நடத்தும் தலைமை ஆசிரியை இவைகளை சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது மேலும் மாணவிகளுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை இங்கே அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களில் குடிநீர் வரவில்லை அதற்குரிய ஏற்பாட்டையும் செய்யாமல் இருக்கிறார்கள் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.இடைவேளை மற்றும்உணவு இடைவேளை நேரத்திலே மாணவிகள் தண்ணீர் குடிப்பதற்கு முடியாத சூழ்நிலை உருவாகிறதுஅதே போல கழிப்பறையும் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது மாணவிகளுக்கு போதிய அளவில் கழிப்பறைகள் இல்லை இவைகளை செயல்படுத்துவதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு போன்ற அமைப்புகள் ஒத்துழைப்போடுதுப்புரவுபணியாளர்கள்அதிகப்படியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.தற்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் குறைக்கப்பட்டதால் பள்ளியின் தரம் பொதுவாக குறைந்திருக்கிறது.
எனவே மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் பள்ளியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபெற்றோர்களும்,பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதற்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியைகளால் மாநில
அளவில் தேர்ச்சி சதவிகிதம் இருந்தது.இப் பள்ளி தலை மை ஆசிரியைமாற்றப்பட்டு வேறு புதியஆசிரியர்நியமிக்கப்பட்டால்மேற்கண்டகுறைகளுக்குதீர்வுஏற்படும்என்றுதெரிகிறது.  பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் இதனை கவனிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்
விரும்புகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close