fbpx
Others

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை….

Amit Shahபுதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச்சிறந்த ஒழுக்கம்மற்றும்பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய President’s Colour அதாவதுவண்ணவிருதுசமீபத்தில்அறிவிக்கப்பட்டது.இந்திய அளவில் காவல் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் இந்த விருதினை வழங்கும் விழா, புதுச்சேரி காவல் மைதானத்தில் கடந்த மாதமே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதில் நேரடியாகப் பங்கேற்று விருதினை வழங்கவிருந்தார். ஆனால் டெல்லியில் திடீரென வெடித்த மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து விட்டன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையாலும், பாதுகாப்பு காரணங்களினாலும் மத்திய அமைச்சரின் புதுச்சேரி பயணம் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது… எனவே காவல் துறைக்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கவிருதுவழங்கும்விழாவும்தற்காலிகமாகநிறுத்திவைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட அந்த விழா இப்போது மறுபடியும் முறைப்படி உறுதி செய்யப்பட்டு, அதற்கான பயணத்திட்டமும் முறைப்படி வெளியாகியுள்ளது.அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 4.55 மணியளவில் புதுச்சேரிக்கு செல்கிறார்.. புதுச்சேரி கடற்கரையையொட்டி அமைந்துள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்றைய தினம் அவர் தங்கிஓய்வெடுக்கிறார்.மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 8.10 மணியளவில் புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமித் ஷா பங்கேற்கிறார்… அப்போது, புதுச்சேரி போலீசாரின் மகத்தான சேவையைப் பாராட்டி, குடியரசு தலைவரின் வண்ண விருதினை வழங்கி கவுரவிக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மாநிலத்தின் முக்கிய உயர் அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். புதுச்சேரி நிகழ்வுகளை நிறைவு செய்த பிறகு, ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10.50 மணியளவில்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா..நவ.27ல் கோலாகல  கொடியேற்றம் | Tiruvannamalai Annamalaiyar Temple Karthikai Deepam Festival  begins with Flag Hoisting on Nov ... ஹெலிகாப்டர் வாயிலாக அமித் ஷா திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்கிறார்.ஆன்மீக நிகழ்வுகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்… சென்னை வந்தடையும் அவர், விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முக்கிய அரசியல் ஆலோசனைக் கூட்டத்தைநடத்துகிறார்.இதில்மாநிலஅரசியல்நிலவரங்கள்மற்றும்கட்சியின்அடுத்தகட்டநகர்வுகள்குறித்துஆலோசிக்கப்படும்எனக்எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு, அன்று இரவே அவர் தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன…!

Related Articles

Back to top button
Close
Close