சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

சிலம்பு செல்வர்
ம.பொ.சி-யின் 121 வது பிறந்த நாளையொட்டி தி நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்ட ராஜா, உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாநில இளைஞரணி பொருளாளர் எஸ்.அன்னராஜ், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் டி.கணேச பாண்டியன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் விருகை கே.மணிராஜ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர். செல்வராஜ், மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் கே.கே.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சந்தீப்ராஜா, மாவட்ட அமைப்பாளர் சிவராஜ், தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் டி.ராஜ சுதாகர், மாவட்ட செயலாளர் ஈகை.டி.விஜயன், மாவட்ட அமைப்பாளர் எம்.முருகன், தி.நகர் தொகுதி செயலாளர் ரமேஷ்குமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்