நீதிபதி — வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த பேருந்து மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பியிருந்தது.தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் கரூரில் நடைபெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தவெகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. நீதிபதி கூறும் போது, கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்த 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஓரிரு நிபந்தனைகளை மட்டுமே தவெகவினர் பின்பற்றியுள்ளனர். இதர நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.அதேபோல்,கரூர்
பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த பேருந்து மோதி ஒரு விபத்துஏற்பட்டதாகவீடியோக்கள்வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்? இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் காவல்துறையை மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை கருணை காட்டுவதை ஏற்க முடியாது. விபத்து தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘இந்த விவகாரத்தை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது’ என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பிய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் போது இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.எனவே எந்த இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்என்றுசொல்லப்படுகிறது. விஜய்யின் பிரசார வாகனம் தற்போது பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.