Others
சிலம்ப போட்டி சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்ப போட்டி அம்பத்தூர் அருகே உள்ளதிருமுல்லைவாயல் தனியார் திடலில் நடைபெற்றது மாவட்ட தலைவர் ஆரம்பாக்கம் டி சுந்தரம் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் வேல் பிரபாகரன் வரவேற்றார் தமிழ்நாடு சிலம்பாட்டகழகதலைவர்முத்துராமன்ஜி போட்டியை தொடங்கி வைத்தார்.மினி சப் ஜூனியர் சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என ஐந்து பிரிவுகளில் சிலம்பப் போட்டி நடைபெற்றது சுமார் 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுக்கோப்பை மற்றும் பதக்கம் ஆகியவற்றை மூத்த ஆசான்கள் ஆர். முருகக்கனி எஸ். ஆர். லட்சுமணன், பி. சென்ன கேசவலு வழங்கி பாராட்டினார்கள்.சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.