சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு புதிய குடிநீர் வினியோக இணைப்புகள் வழங்கப்பட்டதாக 1 கோடியே 3 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் அங்கு ஏற்கனவே உள்ள 5,300 இணைப்புகள் தவிர்த்து புதிய இணைப்புகள் எதுவும் தரப்பட வில்லை என்பதையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதேபோல் ஆத்தூர் நகராட்சியில் ஊழல் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்ட ஊழல் தொடர்பாக உதவி பொறியாளர்கள் இரண்டு பேர், செயற்பொறியாளர்கள் மூன்று பேர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.