fbpx
Others

11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்
தனது மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கிருஷ்ணனின் அரவணைப்பில் தனது மகள்களை விட்டுவிட்டு அந்த பெண் வேலைக்கு சென்று வந்தார். ஆனால், தந்தையாக இருந்து பாதுகாக்க வேண்டிய கிருஷ்ணன், அந்த பெண்ணின் மூத்த மகளான 11 வயது சிறுமியிடம் தனது காமலீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார்.
அதாவது, அந்த பெண் வீட்டில் இல்லாத நேரத்தில், மகள் முறை கொண்ட 11 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி, தனது தாயிடம் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிருஷ்ணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 11 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
தாய் மீது தாக்குதல்
ஆனால், இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளாள். பாதுகாப்பாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே மகளை பலாத்காரம் செய்ததை கேட்டு அந்தபெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணனிடம் கேட்டு அந்தபெண் தகராறு செய்துள்ளார். இதனால், கிருஷ்ணன் அந்த பெண்ணையும் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
போக்சோவில் கைது
இதையடுத்து போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னா் அவரை கோாட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’, பாதுகாப்பாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே, மகளை பலாத்காரம் செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Articles

Back to top button
Close
Close