fbpx
RETamil Newsதமிழ்நாடு

3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்களின் பார்வைக்காக 3 புதிய வெளிநாட்டு குரங்குகள் வைக்கப்பட்டுள்ளது.அவை மூன்றும் வெவ்வேறு விதமான குரங்குகள் ஆகும். அவை முறையே கப்புசின் குரங்கு, அணில் வால் குரங்கு மற்றும் சிவப்பு கை டாமரின் குரங்குகள் என்று மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது இந்த வண்டலூர் உயிரியல் பூங்கா. வார விடுமுறை நாள் என்றாலே மக்களுக்கு நியாபகம் வருவது ஏதேனும் இடத்திற்கு போய் சுற்றிப்பார்க்கலாம் என்பது தான் அப்படி இருக்கும் போது இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு வாரமும் சுமார் 10,000 பேர் வருகின்றனர்.அதனால் வேலை நாளான செவ்வாய் கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை நாளாக இருக்கும்.

இந்நிலையில் இந்த 3 வெளிநாட்டு குரங்குகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.அணில் வால் குரங்கிற்கு வால் மிகவும் நீளமாக இருக்கும், சிவப்பு கை டாமரின் குரங்கிற்கு கை சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த மூன்று குரங்குகள் செய்யும் சேட்டைகள் மக்களை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close