RETamil Newsதமிழ்நாடு
குறைந்து போனது பொறியியல் படிப்பின் மோகம் ! 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல்
கல்லூரிகளில், 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 51 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒப்புதல் கொடுத்துள்ளது .
2018-2019-ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50% மட்டுமே இருந்தது மீதம் இருந்த 50% இடம் காலியாகவே இருந்ததால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.
இது குறித்த கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் மக்களவையில் பதில் அளித்தார்.