fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

போலீஸாரால் அடித்தே கொன்ற சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : இந்திய அளவில் வலுக்கும் போராட்டம்!

புதுடெல்லி:

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறினார்கள் என்று கூறி  போலீசாரால் கைது செய்யப்பட்னர்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசாரின் கடும் சித்தரவதைகளை தாங்க முடியாமல் இருவரும் அடுத்தடுத்து  மரணடைந்தனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக அங்கு இருந்த அனைத்து நண்பர்களும் கூறுகின்றனர்.

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மற்றும் அவர்களுக்கு துணை போன ஜெயிலர்,டாக்டர்,மற்றும் மாஜிஸ்திரேட் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி  தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்  தற்போது மிகபெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு உலகம் முழுவதும் சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக டுவிட்டரில் JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேகில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹேஸ்டேக் தற்போது

சமூக வலைதளத்தில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளவாசிகள், சினிமா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நீதி கிடைக்க வேண்டும் என டுவிட் செய்து வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு எதற்கும் செவி சாய்க்காமல் இருப்பது மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

எடப்பாடி பழனிசாமி ஒன்றும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

Related Articles

Back to top button
Close
Close