fbpx
Others

வழக்கறிஞருக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ.5 லட்சம் இழப்பீடுரத்து..

 வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷனில் மூத்த வழக்கறிஞர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு இந்த சங்க அலுவலகத்துக்குள் சென்று தண்ணீர் குடிக்க முயன்ற இளம் வழக்கறிஞர் ஒருவரை அங்கிருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் தடுத்ததாக அந்த இளம் வழக்கறிஞரின் தந்தையான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்திருந்தார்.அதேபோல இந்த சங்கத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலினத்தவர்களை சேர்க்க மறுப்பதாகக்கூறி வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸும், தன்னை இந்த சங்கத்தில் சேர்க்க மறுப்பதாக வழக்கறிஞர் எஸ். மகாவீர் சிவாஜியும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கெனவேவிசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கறிஞர்கள் மத்தியில் சாதி, மத, இன, பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு ஏற்படுத்தினால், திறமையான வழக்கறிஞர்களை நீதித்துறை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். மூத்த வழக்கறிஞர்கள் இளம்வழக்கறிஞர்களுக்கு அறிவுரைகளையும், யோசனைகளையும் வழங்கினால் மட்டும் போதாது. அவர்களுக்கு நம்பிக்கையையும் சேர்த்து விதைக்க வேண்டும்.எனவே பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை மெட்ராஸ் பார் அசோசியேஷன் வழங்க வேண்டும். அதேபோல வழக்கறிஞர்கள் ஏ.மோகன்தாஸ், எஸ்.மகாவீர் சிவாஜி ஆகியோரையும் ஒருவாரத்தில் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் புதிய உறுப்பினர்களையும் தயக்கமின்றி சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிஐஎஸ்எப்போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் உயர் நீதிமன்றத்துக்குள் இருக்கும் இந்த சங்கத்தைகாலி செய்து, மற்ற சங்கங்கள்போல வெளியே இருந்து செயல்பட பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, விஜய் நாராயண், உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திக் ரங்கநாதன் மற்றும் மனுதாரர்களான வழக்கறிஞர்கள் யானை ராஜேந்திரன், மகாவீர் சிவாஜி ஆகியோர் நேரடியாகவும், ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்புவும் ஆஜராகி வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘வழக்கறிஞர்கள் என்பவர்கள் ஒரு தனி சமுதாயம். அவர்களுக்குள் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியினர் என பிரித்துப் பார்க்கக்கூடாது. அவ்வாறு பிரித்துப் பார்க்கப்படுமானால் வழக்கறிஞர் சமுதாயத்தின் மரியாதை குறைந்துவிடும். எந்த சாதியாக அல்லது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் ஒரே வழக்கறிஞர் சமுதாயம்தான். மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கென்று தனி விதிகள் உள்ளன.அதில் உறுப்பினராக சேர சம்பந்தப்பட்டவர்களை அணுக வேண்டுமேயன்றி, தேசிய பழங்குடியின ஆணையத்தில் புகார்செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. மெட்ராஸ்பார் அசோசியேஷனின் உறுப்பினர்சேர்க்கை விவகாரம் தொடர்பாகஇந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.மனுதாரர்கள்தங்களுக்கானகுறைகளைசம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம். தேவைப்பட்டால் அதற்காக தனியாக ரிட் வழக்குகளையும் தொடரலாம். தனி நீதிபதிதனது வரம்பைத் தாண்டி ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், சங்கத்தை உள்ளே இருந்து காலிசெய்யவும் உத்தரவிட்டுள்ளார். எனவே மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close