fbpx
Tamil News

வயதானால் என்ன காப்பி அடித்து பாஸ் பண்ணலாம் – கேரளாவில் நிகழ்ந்த செயல்

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி என்னும் அஷ்ரலகும் என்ற திட்டம் அமலில் உள்ளது. அதன் மூலம் முதியோருக்கு கல்வி வழங்கி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு எழுதி பல முதியோர்கள் கேரளாவிற்கு பெருமை தேடி தந்துள்ளனர். இவ்வாண்டுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது . இதில் அணைத்து மாநிலத்தில் இருந்தும் 40,440 பேர் தேர்வு எழுதினர்.

 

கேரளாவை சேர்த்த அரசு தொடக்க பள்ளியில் பயிலும் 96 வயது மூதாட்டி ஒருவர் கார்த்திகாயினி தேர்வெழுதிய நிகழ்வு அனைவரையும் வியக்கவைத்தது. அதில் நிகழ்ந்த சுவாரசியம் என்னவென்றால் தேர்வு எழுதிய போது அருகில் இருக்கும் 76 வயது ராமச்சந்திரன் என்பவர் அம்மூதாட்டியை பார்த்து காப்பி அடித்தது.

வயதானால் என்ன காப்பி அடித்தாவது பாஸ் ஆக வேண்டும் என்ற ராமச்சந்திரனின் செயல் மிகவும் சுவாரசியத்தை எழுப்பியுள்ளது. அதிக வயதான பாட்டி கார்த்திகாயினி 96 வயதில் தேர்வு எழுதியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Articles

Back to top button
Close
Close