fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29 ஆவது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 5 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை நான்கு அடுக்குகளாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

ஆனால் சில ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியால் தொழில் முதலீடு முடங்கிப்போய் ஆளையே இயக்க முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்த அவர் அதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கூறினார்.

அதேபோல் 18 சதவீத வரி விதிக்கப்படும் சில ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close