fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

வீடு தேடி வருகிறது ரூ.1000.. முதல்வர் அதிரடி உத்தரவு!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் வரும் 19ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட சென்னை சரகத்தில் வரும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அரசானை பிறப்பித்துள்ளது.

அந்தந்த  குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 வீட்டிற்கே சென்று வழங்க இன்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனோ தொற்று  மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,

நேற்று முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் மற்றும் மருத்துவர்களுடன் நடந்த கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு;

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி நள்ளிரவு  முதல் ஜூன் 30ந்தேதி,நள்ளிரவு வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன் காரணமாக ஏழை ,எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும்,பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்த நான்கு மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது  அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கவும் முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

எனவே யாரும் ரேசன் கடைகளுக்கு போய் நிற்க வேண்டாம்.எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close