fbpx
Others

ராகுல் காந்தி-செல்போன் ஒட்டுகேட்பதுகுற்றவாளிகள் செய்யும் செயல்.

இந்தியாவில்ஐபோன்பயன்படுத்தும்எதிர்க்கட்சித்  தலைவர்கள்,பத்திரிகையாளர்களுக்கு செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட 10 தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் செய்தி அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் சசிதரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா உள்ளிட்டோரின்செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன்களும்ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. அரசின் ஏற்பாட்டில் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019-ல் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது, தங்கள் செல்ஃபோன்களை அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர்,திரிணமூல்எம்பிமகுவாமொய்த்ராஉள்ளிட்டோர்புகார்அளித்துள்ளனர்.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செல்போன் ஒட்டுகேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல, குற்றவாளிகள் செய்யும் செயல் என அவர் கூறினார். ஒரு காலத்தில் இந்தியாவில் ஒரு அரசன் இருந்தான். அவன் எப்போதும் திருடிக்கொண்டிருந்தான். அந்த மன்னரை எதிர்த்து எதிர்கட்சியினர் போராடிக் கொண்டிருந்தனர் என மோசமான மன்னர் பற்றிய கதையை கூறி மோடி அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம் என ராகுல் காந்தி கூறினார். பிரதமர் மோடியின் ஆத்மா அதானியிடம் இருக்கிறது. வழக்கமாக மோடி, அமித்ஷாவைத்தான் நம்பர் 1, நம்பர் 2 என சொல்வார்கள் என சொல்வார்கள். ஆனால் உண்மையில் நம்பர் 1ஆக இருப்பவர் அதானி தான் எனராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close