fbpx
Tamil Newsஉணவு

மோர்க் குழம்பு செய்வது எப்படி !!

தேவையான பொருட்கள் ;

ஓரளவு புளித்த மோர் 250 மில்லி
அரிசி மாவு 1/2 ஸ்பூன்
மல்லி (தனியா) 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 3
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
பெருங்காயம் சிறு துண்டு
கருவேப்பிலை சிறிது
தேவையான அளவு உப்பு

செய்முறை ;

முதலில் மோரில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் , அரிசி மாவு , கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கரைக்கவும். தனியா (மல்லி), வெந்தயம் , வற்றல் மிளகாய் , உளுத்தம் பருப்பு , பெருங்காயம் இவற்றில் சிறிது எண்ணெய் ஊற்றி வாணலியில் வருது அம்மியில் வைத்து அத்துடன் பச்சை மிளகாய் , தேங்காய் இவற்றோடு சேர்த்து மசிய அரைத்து கொண்டு மோரில் கலந்து , கையால் நன்கு கரைக்கவும் , பின்பு அதை அடுப்பில் நுரை வரும் வரை வைத்து இறக்கி கடுகை தாளித்து கொட்டினால் சுடசுட மோர் குழம்பு ரெடி.

Related Articles

Back to top button
Close
Close