fbpx
Others

முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாதவரத்தில் துவக்கம்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்குகாலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை 37 மாநகராட்சி பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்திற்காக மாதவரம் லாரி டெர்மினலில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வாகனங்களில் மாநகராட்சி பள்ளிகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆகியோர்கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் அமைச்சர் பெருமக்களும் மேயர் உட்பட மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவினை உண்டு மகிழ்ந்தனர்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், நிலை குழு உறுப்பினர் விஸ்வநாதன், சென்னை வடக்கு துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் சந்திரன், காசிநாதன், கார்த்திகேயன், குணசுந்தரிகுட்டி மோகன், சங்கீதா பாபு, ஏழுமலை, கனிமொழி சுரேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close