fbpx
Others

மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்…..சோகத்தில் ரசிகர்கள்….!

  •  விஜயகாந்தின் சமீபத்திய படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார்.விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்  .பின்னர் அரசியலில் நுழைந்து அங்கும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால்பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.

Related Articles

Back to top button
Close
Close