fbpx
Others

 மருத்துவ விடுப்பு சான்றிதழ்: புதிய விதிமுறைகள் வெளியீடு

மருத்துவ  விடுப்பு  சான்றிதழ்  விதிமுறைகளை தமிழ்நாடு மருத்துவ கெளன்சில் வெளியிட்டுள்ளது. மருத்துவ சான்று 5 நாட்களுக்கு மேல் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே முடிவுகளின் அடிப்படையில் வழங்க வேண்டும். விடுப்பு சான்று வழங்கும் மருத்துவர் நோயாளியின் விவரங்களை பராமரிக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு மருத்துவ சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது.

பால் விலை மீண்டும் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

டில்லியில் முன்னணி பால் விற்பனை நிறுவனமான மதர் டெய்ரி பால் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஃபுல்கிரீம் பால் லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் நாளை (நவம்பர் 21) முதல் உயர்த்தப்படுகிறது. இதன்படி மொத்தமாக விற்பனை பால் லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.50க்கு விற்கப்படும். கடந்த மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close