மது வாங்க லைன் கட்டி நின்ற பெண்கள்…! டுவிட்டரில் பதிவிட்ட பிரபல இயக்குநர்
Director ramgopal verma about bangaluru wineshop

பெங்களூரு: மதுக்கடைகள் முன்பு பெண்கள் வரிசையில் நின்ற சம்பவத்தை பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா கண்டித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அதனால் 2 மாதங்களாக காய்ந்து போன மதுபிரியர்கள் ஏராளமாய் குவிந்தனர். பெங்களூவில் ஒரு மதுக்கடையின் முன்பு, பல இளம் பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து, இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: மதுக்கடைகளில் யார் வரிசையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். குடிபோதையில் இருக்கும் ஆண்களுக்கு எதிராக பெண்களை பாதுகாப்பது தான் இப்போது அதிகம் என்று தெரிவித்துள்ளார்.















