fbpx
Others

மதுரை–மாவட்ட ஆட்சியர்…. பார்வைக்கு…..

அனுப்புநர்
கே.கோபால்
துணை தலைவர்
வேடர் புளியங்குளம் ஊராட்சி மன்றம் வேடர் புளியங்குளம்
மதுரை 6

பெறுநர்உயர்திரு.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

பொருள் ;

மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், வேடர் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு அ.கண்ணன் மற்றும் ஊராட்சி செயலாளர் கே. வேல்முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு பணத்தை வீண் செலவு செய்வது சம்பந்தமாக…

வணக்கம்
சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக வேடர் புளியங்குளம் ஊராட்சியில்(120/3-5 பொதுப்பணித்துறை சொந்தமான கண்மாய் இடம்) மூலிகை தோட்டம் சுமார் 5 ஏக்கரில் ஐந்து கட்டடங்கள் கட்டப்பட்டு முதியவர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் என காப்பகம் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தி வந்தனர்.அந்த இடத்தில் குழந்தை இயேசு கோயில் கட்டப்பட்டு இருந்தது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை உயர் மன்ற கிளை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் பிடிப்பது பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக கோரி வழக்கு நடைபெற்று, அந்த இடத்தில் மூலிகை தோட்டம் கட்டிடம் மற்றும் அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்க ஏதும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி ஆக்கிரமிப்பு செய்தவர்களை சொந்த செலவில் அப்புறப்படுத்தவும் உத்தரவும் வழங்கப்பட்டது.  இந்த இடத்திற்கு பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகளும் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றினார்.    இந்த இடம் ஆனது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் பிடிப்பு பகுதியாகும். நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திரு கண்ணன் அவர்கள் அதை சுற்றி வேலி கம்பியும் மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணைக்கு கொட்டகை அமைத்தும் மீன் பண்ணைக்கு மிக பெரிய குளியும் தோண்டி வருகிறார்.ஊராட்சி நிர்வாகம் இந்த இடமான பிரச்சனைக்குரிய இடம் என்பதை உண்மை தன்மையை மாவட்ட ஆட்சியர் க்கு மறைத்து ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பசுமை தோட்டம் என்ற பெயரில் வேலை செய்து அனுமதி பெற்றுள்ளனர்.மேலும் வேடர் புளியங்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் சில விவசாயிகள் இதே போல் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. நீர் வரும் பாதையை தடுத்து வருகின்

றனர். இதே போல் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே போனால் கண்மாய் அடுத்து தலைமுறையினருக்கு கண்மாயை இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடுவதை வரவேற்கிறோம் ஆனால் புறம்போக்கு நிலம் என்று சொல்லி 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான இடத்தில் செய்வது சரியானது அல்ல இது விவசாயிகளை முற்றிலும் பாதிக்கும் செயலாகும் நீர் வரும் பாதையை தடுத்து ஏற்கனவே குழந்தை இயேசு என்ற பெயரில் செய்தவர்கள் மீது உயர்நீதிமன்றம் அந்த இடத்தை முழுவதும் அந்த இடத்தை அகற்றநடவடிக்கை எடுத்தது.  அந்த இடத்தில் மீண்டும் அரசு வேலி மற்றும் கட்டடங்கள் கட்டுவது செய்வது நியாயமா? கண்மாயை தனிநபர் செய்தால் மட்டும் தான் ஆக்கிரமிப்பா? அரசு செய்தால் ஆக்கிரமிப்பு இல்லையா? எனவே நீர் வரும் பாதையை வேலி அமைத்ததை முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.  மேலும் அங்குள்ள கட்டடப் பணிகளை ஏற்கனவே அகற்றப்பட்டது மீண்டும் கட்டடங்களை உருவாக்க கூடாது.     எனவே கண்மாய்க்கு நீர் வரும் பாதையை இப்படி ஆக்கிரமிப்பு செய்து கொண்டே போனால் நீர்வரும் பாதையை தடுத்து வருவதால் நாளை குடிதண்ணீருக்கும் , விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் அனைவருக்கும் முற்றிலும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் அமைத்து வரும் வேலி

களையும் கட்டிடப் பணிகளை அகற்றப்பட வேண்டும்.
மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வேடர் புளியங்குளம் கண்மாயை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி கண்மாயை அத்துமால் காட்டி நடவடிக்கை எடுக்க மிகப்பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.      சில குறிப்புகள்

1இந்த இடத்தில் வேலை செய்வது தொடர்பாக கிராம சபையில் தெரியப்படுத்தவில்லை.

2 ஊராட்சி செயலாளர் மீது ஏற்கனவே இவர் மீது வழக்கு எண் (23567) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஊராட்சியில் 8 வருடமாக பணியாற்றி வருகிறார்.  3. ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.4. பொதுப்பணி துறையினருக்கும் முன் அனுமதியும் இதுவரை பெறவில்லை
5.விஏஓ தாசில்தார் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவில்லை எனவே
தவறான தகவல் கொடுத்து மறைத்து வேலை செய்ய அனுமதி பெற்றுள்ள ஊராட்சி தலைவர் மீதும் ஊராட்சி செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Back to top button
Close
Close