fbpx
REதமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது;

ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.

கடந்த மார்ச் 26-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 1 வகுப்புத் தேர்வை எழுதாத மாணவர்கள், ஜூன் 2-ம் தேதி அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஏற்கெனவே  விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, ஜூன் 4-ம் தேதி நடைபெறும்.

மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 34 ஆயிரத்து 842 பேர் வாகனங்கள் குறைவால் எழுத முடியவில்லை என்ற செய்தி வெளியானது.

அவர்கள் மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி அத்தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும்.

வரும் மே 27-ம் தேதியிலிருந்து 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்படும்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்வுகளின்போது  எடுக்கப்படும்.

பள்ளி திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close