fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு…! இன்று இறுதிச்சடங்கு!

Bharathidaasan son mannarmannan dead

புதுச்சேரி:

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்.

பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92) கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில்,  இன்று புதுச்சேரியில் காலமானார்.

மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தந்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது,  திரு.வி.க விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது என பல விருதுகள் பெற்றுள்ளார்.

காமராசர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி ‌ஆர், ஜெயலலிதா, ஆகியோருடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றவர். புதுச்சேரியில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அவரது மகன் பாரதி தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close