fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

அறிகுறி எதுவும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா-அதிர்ச்சி தகவல்!!

சென்னை :

எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம்  அடைகின்றனர்.இந்த கொரோனா வைரஸால்.

தமிழகத்தில் தினந்தோறும்  கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேல் இந்த தொற்றால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டுமே நாளுக்கு நாளுக்கு பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையில் உள்ள அரசு  மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி விட்டது.

இதன் காரணமாக பலரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலையில் அரசு  உள்ளது.

அதிகமான  பாதிப்பு உள்ளர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றவர்கள் கொரோனா வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் தான்  சென்னையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து  சிலர் ஒரு நாள் மற்றும் ஒரு சில மணி நேரத்தில் மரணத்தை தழுவுகின்றனர்.

இதற்கு  முக்கிய காரணமாக சொல்லப்படுவது அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குவதுதான்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களுக்கு முதலில் சளி, காய்ச்சல், இருமல், உடம்பு வலி, தொண்டை வலி போன்ற  சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படும்.

இறுதியாகதான் மூச்சு திணறல் ஏற்படும்.

இதன்பிறகு அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

சில நாட்களாக இந்த வைரஸ் எவ்வித சிறிய அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுழையீரலை தாக்கி பாதிப்பு உண்டாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிகின்றனர்.

இது தொடர்பாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும்போது, “எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை.

ஆனால் ஒரு நாள் திடீரென்று மூச்சு விடுதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக நுரையீரல் சிறப்பு மருத்துவர்  எம்.ஹரிஸ் கூறும்போது:

கொரோனா வைரஸ் காற்றில் உள்ள சளி மூலமாக ஒருவரிடம்  இருந்து இன்னொருவருக்கு  பரவுகிறது.

இந்த வைரஸ் மூச்சு குழாய் வழியாக தான் உடலின் உள்ளே செல்கிறது. இதன்படி இது முதலில் மூச்சு குழாய் மற்றும் அது சார்ந்த நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை அதிகம் செயலிழக்க வைக்கிறது.

பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு  நுரையீரல் பகுதியில் சளி கட்டி கொள்ளும். இதைத் தொடர்ந்து மூச்சு கலக்கும் இடத்தில் சளி அடைத்து கொள்கிறது.

அப்போது சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும். இதைத்தவிர்த்து மாரடைப்பு, ரத்தம் கட்டுதல், நுரையீரல் செயல் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் தொடர்ந்து  ஏற்படுகிறது.

இதனால் தான் செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னை  உள்ளவர்களுக்கு செயற்கை சுவாசம் அளித்தாலும் பலன் இல்லாமல் உயிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் தான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்  வயது அதிகம் உடையவர்கள் எவ்வித மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மரணம் அடைகின்றனர்.

குறைந்த வயது உடையவர்கள் குணமடைந்து விடுகின்றனர்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close