கந்துவட்டியிலிருந்து பொதுமக்களை விடுவிக்குமா அரசு..?
வங்கிகள்மற்றும் பிற தனியார் பைனான்ஸ், நிதி நிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ஒரு சில சமூக விரோதிகள் மூலம் செய்து வருகின்ற அடாவடித்தனம் ! இவற்றிற்கு துணை போகும் வங்கி ஊழியர்கள்?….. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு வங்கிகள் மற்றும் சில தனியார் பைனான்ஸ், நிதி நிறுவனங்கள் கொஞ்சம் கூட தகுதியில்லாத மற்றும் வருமானம் அல்லாத பொதுமக்களுக்கு கடன்கள் மற்றும் கடன் அட்டைகளை கவர்ச்சியாக பேசி கட்டாயமாக பொருட்களை வாங்க வைத்து அவர்களை கடனாளியாக ஆக்கிவிடுவது…. பின்னர் அவர்களுக்கு நடத்தி வருகின்ற தொழில் நஷ்டம் ஏற்பட்டு அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவணைக் காலம் நீடித்துக் கொண்டு போகும் போது அவர்களை கண்டபடி திட்டுவது, மற்றும் சமூக விரோதிகளை வைத்து மிரட்டுவது, அவர்களை பணி செய்ய விடாமல் கைப்பேசி வழியே கண்ட கண்ட எண்கள் மூலம் அழைத்து மெண்டல் டார்ச்சர் செய்து அவர்களை மனநோயாளிகளாகவே ஆக்கிவிடுவது, போதாக்குறைக்கு அடியாட்களை வைத்து மிரட்டுவது… இது போன்ற செயல்களை செய்ய இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? அவர்கள் தவணை செலுத்த கால அவகாசம் கொடுத்து உதவலாமே! அல்லது அதை விடுத்து இந்த மாதிரி அடாவடியாக செயல்பட நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்துள்ளதா ? இவ்வாறு செய்வதால் தேவையற்ற உயிரிழப்புகள் தான் ஏற்படுமே ஒழிய இவைகள் எல்லாம் தீர்வுகள் ஆகாது.. சமீபத்தில் கூட ஒரு பெண்மணி இது போன்ற செயல்களால் தற்கொலைக்கு முயன்று தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தசெய்தியைநாங்கள்வெளியிட்டிருந்தோம். ஆனாலும் இந்த மாதிரி சம்பவம் நடந்த வண்ணமாகத்தான் உள்ளது. ஆதலால் இந்த மாதிரியான அடாவடியான சம்பவம் நடைபெறாத வண்ணம் உரிய கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!! இந்த மாதிரி அடாவடித்தனம் செய்து வருகின்ற நபர்கள் மற்றும் இவர்களுக்கு துணை போகும் வங்கி மேலாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பேசுவது நம் காதுபட கேட்கின்றது? நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து பார்ப்போம் !!!….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.