fbpx
Others

பாடியநல்லூர்-அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை பூஜை விழா.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாடியநல்லூரில் 1500 பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டது!   கும்பாபிஷேக நிகழ்ச்சி எல்.இ.டி திரையில் காட்டப்பட்டது பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்!! அயோத்தியில்
ஸ்ரீ ராமஜென்ம பூமி பிராண பிரதிஷ்டைபூஜை விழா நடைபெற்றதை யொட்டி
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர் அருள்மிகுஅங்காளஈஸ்வரி முனீஸ்வரர் ஆலய திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் .கே. ஆர். வெங்கடேசன் தலைமையில்
ஸ்ரீ ராமஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை நிகழ்வுகள்LED திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது.பிராணபிரதிஷ்டை யாகசாலை பூஜைகள் உற்சவ ராமர் சிலைகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாக கலச பூஜைகளுடன் பூஜை நடைபெற்றது . பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர். சக்கரவர்த்தி நாயுடு
கலந்து கொண்டு பக்தர்கள்1500 பேருக்கு அன்னதானம் வழங்கி புடவை .மஞ்சள் குங்குமம் . தாலிகயிறு உள்ளிட்ட பிரசாத பைகளை வழங்கினார். இதில் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிஎம். பி. நரேஷ் குமார்மாவட்ட துணை தலைவர். மகேந்திரன் மாவட்ட பொருளாளர். சுகுமாரன்.ரவிக்குமார் .புழல். சோழவரம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி யை நடத்தகாவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் அனுமதி பெற்றுநடத்தப்பட்ட இந்த நிகழ்வை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close