fbpx
Others

நீடாமங்கலம் — A.P.J.அப்துல்கலாம்பிறந்தநாள் விழா


A.P.J.அப்துல்கலாம் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் பாரத ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா நிறுவனர் ரியாஸ் தலைமையில் நடந்தது. உதவும் மனங்கள் அறக்கட்டளை மற்றும் என் இந்தியா என் இயக்கம் நிறுவன தலைவர் நீடா எஸ்.எஸ்.குமார் முன்னிலை வகித்தார். நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சிவபிரகாசம், கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினார்.நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன், பாஜக மாவட்ட துணைத்தலைவர் எல்.ஜெயகுமார், ஆசிரியர் P.ஜெகதீஷ் பாபு, கவுண்சிலர் சீனு ராஜா தூய்மை பாரத இயக்கம் தமிழ் நாடு திருவாரூர் மாவட்ட கன்வினர் சுரேஷ் உட்பட காவல்துறையினர், சமூக நல அமைப்பினர், அப்துல்கலாம் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close